பட்டாசு விற்பனையாளர்களுக்கான விதிமுறைகள் விளக்க கூட்டம் :

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பட்டாசு விற்பனை யாளர்களுக்கான கூட்டத்தில் பேசும் வட்டாட்சியர் கோவிந்தராஜன்.
சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பட்டாசு விற்பனை யாளர்களுக்கான கூட்டத்தில் பேசும் வட்டாட்சியர் கோவிந்தராஜன்.
Updated on
1 min read

பட்டாசு விற்பனையாளர்களுக் கான விதிமுறைகள் விளக்க ஆலோசனைக் கூட்டம் தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

வட்டாட்சியர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் குமரவேல், சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் வரதராஜன், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மனோகரன் (பெரண மல்லூர்), சிவனேசன் (சேத்துப்பட்டு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் பேசும்போது, “அரசு விதிகளுக்கு உட்பட்டு பட்டாசு விற்பனை செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், போக்குவரத்து இடையூறு இல்லாமல் பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. தீயணைப்பு உபகரணங்களை கடையில் வைத்திருக்க வேண்டும்.

விழிப்புணர்வு வாசகங்களை மக்களின் பார்வையில் படும் வகையில் பட்டாசு விற்பனைக் கடையில் வைத்திருக்க வேண்டும். அரசு வகுத்துள்ள விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in