சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் - அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு :

சேத்துப்பட்டில் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க கிளை மாநாட்டில் பேசும் மாநில பொருளாளர் பாஸ்கரன்.
சேத்துப்பட்டில் நடைபெற்ற அரசு ஊழியர் சங்க கிளை மாநாட்டில் பேசும் மாநில பொருளாளர் பாஸ்கரன்.
Updated on
1 min read

சேத்துப்பட்டில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலக மன்ற கூடத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ராஜாராம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கவிதா வரவேற்றார். சங்க கொடியை மாநிலப் பொருளாளர் பாஸ்கரன் ஏற்றி வைத்து தொடக்க உரையாற்றினார்.

ஆண்டு அறிக்கையை கிளை செயலாளர் முத்துவேலன், கிளை பொருளாளர் பாபு ஆகியோர் சமர்ப்பித்தனர். புதிய நிர்வாகிகளை மாவட்ட இணைச் செயலாளர் மணி அறிமுகம் செய்து வைத்தார். மாவட்டத் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டச் செயலாளர் பிரபு சிறப்புரையாற்றினார். மறைந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாநாட்டில், “மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப் படியை மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர் களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சேத்துப்பட்டு வட்டத்தில் சார்நிலை கருவூலம் மற்றும் நீதிமன்றம் அமைக்க வேண்டும், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும், அனைத்து ஊர்களில் இருந்தும் சேத்துப் பட்டுக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிவில், துணைத் தலைவர் ரவி நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in