நந்தன் கால்வாய் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடித்திடுக : விழுப்புரம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

விழுப்புரம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றோர்.
விழுப்புரம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றோர்.
Updated on
1 min read

நந்தன் கால்வாய் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத் தியுள்ளனர்.

விழுப்புரம் ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூறியது:

பட்டா மாற்றம் செய்வதில் மிகுந்த காலதாமதமாகிறது. வரு வாய்த் துறையினர் உடனுக்குடன் இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழங்காலில் 5 கிமீ தூரத்திற்கு மணல் அதி கரித்துள்ளது. உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண் டும். கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் உடனுக்குடன் வழங்கப்படு வதில்லை. விவசாயம் செய்வதை விட பயிர்கடன் பெறுவது கடின மாக உள்ளது.

எள், உளுந்து விதைகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பேருந்துகளில் சில மாதங்களாக அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். நந்தன் கால்வாய் சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த ஆட்சியர்,திங்கட்கிழமை தோறும் மக்கள்குறைகேட்கும் நிகழ்ச்சி முடிந்த பின்பு கூட்டுறவு இணைப்பதிவாளர் முன்னிலையில் அந்தந்த வாரம் எவ்வளவு விவசாய கடன் கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்யப்படும். மற்ற கோரிக்கைகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

இக்கூட்டத்தில் வேளாண் துறை இணை இயக்குநர் ரமணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விவசாயம் செய்வதை விட பயிர்கடன் பெறுவது கடினமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in