

திருச்சுழி அருகே பி.தொட்டியாங்குளத்தைச் சேர்ந்தவர் பாலாஜி(24). லாரி ஓட்டுநர். அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் பூமி என்பவருக்குச் சொந்தமான வீட்டுக்கு அருகே கட்டுமானப் பொருட்களை இறக்கி வைப்பதற்காகச் சென்றார். அப்போது மின்சாரம் தாக்கி பாலாஜி இறந்தார். அருப்புக்கோட்டை நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.