

செய்யாறு அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 5 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய் துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் விரிவு பகுதியில் வசிப்பவர் சதீஷ். இவர், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, வந்தவாசியில் இருந்து தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
புரிசை ஏரிக்கரை பகுதியில் வந்தபோது, எதிர் திசையில் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், சதீஷை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி தங்க செயின், செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த அனக்காவூர் காவல் துறையினர், மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். அதில், கிடைத்த தகவலின் பேரில் எச்சூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 5 இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
நண்பர்களான அவர்கள், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் வசிக்கும் பூபாலன் (22), சென்னை பட்டாபிராம் பகுதியில் வசிக்கும் அஜித்குமார் (20), லோகேஷ்(20), ராகுல்(21) மற்றும் அடைக்கலம் கொடுத்த அவர்களது நண்பர் சந்தான கோபாலகிருஷ்ணன் (22) என்ப தும், அவர்கள் பல்வேறு பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
பல்வேறு இடங்களில் கைவரிசை