வேட்டவலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்்க்கும் வகையில் - புறவழிச்சாலை அமைக்க கருத்து கேட்பு : கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

வேட்டவலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்்க்கும் வகையில் -  புறவழிச்சாலை அமைக்க கருத்து கேட்பு :  கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
Updated on
1 min read

வேட்டவலத்தில் புறவழிச்சாலை அமைப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நடை பெற்றது.

திருவண்ணாமலை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் வேட்டவலம் பேரூராட்சியின் காந்தி சாலை உள்ளது. இச்சாலை, மிகவும் குறுகலாக இருப்பதால், அதனை கடந்து செல்லும் வாகனங்கள் ஸ்தம்பித்து போகின்றன. இதனால், காந்தி சாலையில் அடிக்கடி போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சுமார் 500 மீட்டர் தொலைவு உள்ள சாலையை கடக்க, 20 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் ஆகிறது.

இதன் எதிரொலியாக, வேட்டவலத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, நெய்வாநத்தம் கூட்டுச்சாலையில் இருந்து வேட்டவலம் பேரூராட்சி அலுவலகம் அருகே வரை புறவழிச்சாலை அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்துக் கேட்பு கூட்டம் வேட்டவலத்தில் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள், நிலம் கையகப் படுத்தும்போது சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in