திருவள்ளூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் :

திருவள்ளூரில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் :

Published on

அந்த வகையில், இன்று (அக். 29) காலை 10 மணியளவில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஆகியவை நடைபெற இருக்கின்றன.

இம்முகாமில் பல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களில் உள்ள காலி பணியிடங்கள், பயிற்சியிடங்களுக்கு, 10- ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ, முடித்தவர்களை தேர்வு செய்ய உள்ளன. எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான ஆள் சேர்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in