மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் - தனியார் பள்ளிகளில் படிக்க 5 மாணவர்களுக்கு வாய்ப்பு : ஆணைகளை வழங்கிய வேலூர் ஆட்சியர்

மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில்  -  தனியார் பள்ளிகளில் படிக்க  5 மாணவர்களுக்கு வாய்ப்பு :  ஆணைகளை வழங்கிய வேலூர் ஆட்சியர்
Updated on
1 min read

வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தனியார் பள்ளிகளில் படிக்க தேர்வு செய் யப்பட்ட 5 மாணவர்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங் கினார்.

வேலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மாவட்ட அளவில் சிறந்த தனியார் பள்ளிகளில் படிப்பதற் கான தேர்வு நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நடைபெற்றது.

இதில், வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட 5-ம் வகுப்பு நிறைவு செய்த 16 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தேர்வுகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் காமராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.

தேர்வு முடிவில், ஒரு வட்டாரத்துக்கு ஒரு மாணவர் அல்லது மாணவி வீதம் மொத்தம் 6 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஒரு மாணவர் மட்டும் கடைசி நேரத்தில் தனியார் பள்ளியில் படிக்கவில்லை என கூறினார்.

இதையடுத்து, 5 மாணவ, மாணவிகள் சிறந்த தனியார் பள்ளிகளில் படிப்பதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வழங்கினார். இவர்கள் தேர்வு செய்த தனியார் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை இலவசமாக படிக்கலாம். அவர்களுக்குரிய கல்விக்கட்டணத்தை ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் செலுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in