

வேலூர் மக்கள் தொடர்பு கள அலுவலகம், அகிலாண் டேஸ்வரி மகளிர் கல்லூரி சார்பில் கரோனா தொற்று தடுப்பு, 75-வது சுதந்திர ஆண்டு விழா கொண் டாட்டம், ஒரே பாரதம் உன்னத பாரதம், தூய்மை இந்தியா இயக்கம், தேசிய ஒற்றுமை தினம் குறித்த விழிப்புணர்வு முகாம் வந்தவாசியில் நடைபெற்றது.
வந்தவாசி அகிலாண் டேஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற முகாமுக்கு கல்லூரி முதல்வர் ருக்மணி தலைமை வகித்தார். செயலாளர் ரமணன் முன்னிலை வகித்தார். மக்கள் தொடர்பு கள விளம்பர சென்னை மண்டல இயக்குநர் காமராஜ் தொடங்கி வைத்து, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றுகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து, தனி நபர் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும். சுகாதாரமாக வாழ்ந்தால் உயிரிழப்பு களை தவிர்க்கலாம்’’ என்றார்.
இதில் வந்தவாசி வட்டாட்சியர் முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்த், வேலூர் மக்கள் தொடர்பு கள விளம்பர அலுவலக உதவி அலுவலர் ஜெயகணேஷ், பேராசிரியர் கலைவாணி, நூலகர் கலாராணி உட்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது.