பழுதடைந்த ஆழ்குழாயை சரி செய்யக்கோரி -  மண்டல அலுவலகம் முற்றுகை :

பழுதடைந்த ஆழ்குழாயை சரி செய்யக்கோரி - மண்டல அலுவலகம் முற்றுகை :

Published on

திருப்பூர் திலகர் நகர் 3-வது வீதியில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் மோட்டார் பழுதுஅடைந்திருப்பதால், கடந்த 15 நாட்களாக இப்பகுதி மக்களுக்கு உப்புத்தண்ணீர் விநியோகம் நடைபெறவில்லை.

இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் சாந்தி தலைமையில் வேலம்பாளையம் முதலாவது மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர்கள் அ.ஆறுமுகம், சின்னசாமி, நவபாலன், சாந்திஆகியோர் மண்டல அலுவலக கண்காணிப்பாளர் ராஜசேகரிடம் முறையிட்டனர். இதையடுத்து, குழாய்ஆய்வாளர் சண்முகம் அப்பகுதிக்கு சென்று ஆழ்குழாய் பிரச்சினையை ஆய்வு செய்து தீர்த்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்காணிப்பாளர் ராஜசேகரிடம் மனு அளித்த பொதுமக்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in