

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் துணை மின் நிலையத்தில் நாளை (அக். 28) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனால் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை தண்டலம், சென்னேரி, மயிலை, திருவடிசூலம், மடையத்தூர், அனுமந்தபுரம், காலவாக்கம், கேளம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய மறைமலைநகர் பகுதி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.