

மருத்துவம் சார்ந்த இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு தற்போது ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் சார்ந்த பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட 8 வகையான மருத்துவம் சார்ந்த படிப்புகளில் 400 இடங்களை நிரப்புவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் நவம்பர் மாதம் 8-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பர் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துணை முதல்வர் அனிதா உடன் இருந்தார்.