

அரியலூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் நடத்தப்படவுள்ள 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிகளுக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அக்.30-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் குழுக்களாகவோ அல்லது தனிநபராகவோ கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்புபவர்கள் 1.1.2002-க்கு பின்பு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
வரும்போது அவசியம் வயதுச் சான்றிதழ் கொண்டு வரவேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் வீரர்,வீராங்கனைகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என அரியலூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகச் செயலாளர் திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.