வள்ளியூரிலிருந்து 3 புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கம் :

வள்ளியூரிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு 3 புதிய வழித்தடத் தில் பேருந்துகளை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்து பயணம் செய்தார்.
வள்ளியூரிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு 3 புதிய வழித்தடத் தில் பேருந்துகளை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்து பயணம் செய்தார்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரிலிருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு 3 புதிய வழித்தடத்தில் பேருந்துகளை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு தொடங்கி வைத்தார்.

வள்ளியூரைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்குள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வள்ளியூர் வருகிறார்கள். அவர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை என்பது குறித்து தமிழக சட்டப் பேரவை தலைவரிடம் கிராம மக்கள் மனுக்களை அளித்திருந்தனர்.

இதையடுத்து வள்ளியூரிருந்து சின்னம்மாள்புரம், ஆச்சியூர் வழியாக பரப்பாடி வரையிலும் மற்றும் வள்ளியூரிலிருந்து கிழவனேரி, அச்சம்பாடு, ஆனை குளம், துலுக்கர் பட்டி, முத்துலா புரம் வழியாக பரப்பாடி வரையிலும் இரு பேருந்துகள் இயக்க அவர் நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும், வள்ளியூரிலிருந்து கூத்தங்குழி வரை இயக்கப்படும் பேருந்து காடுதுலா வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த 3 புதிய பேருந்துகளை வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சட்டப் பேரவை தலைவர் தொடங்கிவைத்தார். பின்னர் புதிய வழித்தட பேருந்தில் அவரும், திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் திமுக நிர்வாகிகளும் டிக்கெட் எடுத்து பயணம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in