கிருஷ்ணகிரி  பழங்குடியின மாணவ, மாணவிகள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு :

கிருஷ்ணகிரி பழங்குடியின மாணவ, மாணவிகள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு :

Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவிகள் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட பழங்குடியினர் மேம்பாட்டு திட்டம் மற்றும் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கேட்டரிங், தையல், ஓட்டுநர், மருத்துவம் சார்ந்த செவிலியர் மற்றும் எலக்ட்ரீசியன் மற்றும் இதர இனங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேற்காணும் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தகுதியுள்ள மாணவ, மாணவிகளிடமிருந்து வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி விவரம் மற்றும் சாதிச்சான்றுடன் நாளைக்குள் (25-ம் தேதி) (பழங்குடியினர் அடையாள அட்டையுடன்) விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண்.26-ல் செயல்பட்டு வரும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in