

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்ட கிளை மாநாடு மற்றும் கொடியேற்றுவிழா திரு வண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வட்ட கிளை தலைவர் மா.பருதிமால் கலைஞன் தலைமை வகித்தார். வட்ட கிளை செயலாளர் த.சந்தோஷ்குமார் வரவேற்றார். சங்கத்தின் கல்வெட்டை மாநில பொருளாளர் மு.பாஸ்கரன் திறந்துவைத்தார். சங்கக் கொடியை மாநில செயலாளர் இரா.ந.நம்பிராஜன் ஏற்றிவைத்தார். வட்டாட்சியர் எஸ்.சுரேஷ், மாவட்டத் தலைவர் எஸ்.பார்த்திபன், மாவட்டச் செயலாளர் க.பிரபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில், வட்ட கிளை பொரு ளாளர் எஸ்.ஏங்கல்ஸ் பிரபு நன்றி கூறினார்.