விழுப்புரம் மாவட்டத்தில் - 12 ஒன்றியக் குழு தலைவர்கள் பதவிகள் திமுக வசமானது :

செஞ்சி ஒன்றியக்குழு தலைவராக விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
செஞ்சி ஒன்றியக்குழு தலைவராக விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டு, அதிகாரிகள் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் 12 ஒன்றியக் குழு தலைவர்களாக திமுகவினர் நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் 12 ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு நேற்று தேர்தல் நடந்தது. மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மட்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் 12 ஒன்றியங்களும் திமுக வசமானது.

விழுப்புரம் மாவட்டத்தில ஒன்றியக் குழு தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம்:

ஒன்றியக்குழு தலைவர்களாக செஞ்சி விஜயகுமார், மேல்மலை யனூர் கண்மணி நெடுஞ்செழியன், வல்லம் அமுதா ரவிக்குமார் , மயிலம் யோகேஸ்வரி மணிமாறன், ஒலக்கூர் சொக்கலிங்கம், காணை கலைசெல்வி, விக்கிரவாண்டி சங்கீத அரசி, திருவெண் ணெய்நல்லூர் ஓம்சிவசக்திவேல், முகையூர் தனலட்சுமி, கண்டமங் கலம் வாசன், வானூர் உஷாமுரளி, கோலியனூர் சச்சிதாநந் தம் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.

ஒன்றியக் குழு துணைத்தலைவர்களாக செஞ்சி ஜெயபாலன், மேல்மலையனூர் விஜயலட்சுமி, வல்லம் அண்ணாதுரை, மயிலம்புனிதா, ஒலக்கூர் ராஜாராம், காணை வீரராகவன், விக்கிரவாண்டி ஜீவிதா, திருவெண் ணெய்நல்லூர் கோமதி, முகையூர் மணிவண்ணன், கண்டமங்கலம் நஜிரா பேகம், வானூர் பருவ கீர்த்தனா, கோலியனூர் உதய குமார் தேர்வு செய்யப்பட்டனர்.

மொத்தமுள்ள 13 ஒன்றியங்களில் 12 ஒன்றியங்களில் நேற்று தேர்தல் நடந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in