

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் மற்றும் தெற்கு நாணலூர் கிராம விவசாயிகள் 2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீடு வழங்க வலியுறுத்தி பெருகவாழ்ந்தான் கடைவீதியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கருத்திருமன் மற்றும் விவசாயிகள் ஜி.கே.குணசேகரன், முருகானந்தம், எழிலரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தகவலறிந்த கோட்டூர் வேளாண் துறை உதவி இயக்குநர் தங்கபாண்டியன் மற்றும் பெருகவாழ்ந்தான் போலீஸார் வந்து, 15 நாட்களில் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால், மறியல் கைவிடப்பட்டது