காவல் நிலைய வளாகத்தில் பெண் விஷமருந்தி தற்கொலை முயற்சி :

காவல் நிலைய வளாகத்தில் பெண் விஷமருந்தி தற்கொலை முயற்சி :
Updated on
1 min read

பல்லடம் அருகே பொங்கலூர் வெள்ளநத்தத்தை சேர்ந்தவர் திவ்யா(26). ஆசிரியை பயிற்சி படிப்பு முடித்துள்ளார். இவரது உறவினர் காங்கயம் எல்லப்பாளையத்தை சேர்ந்த பொறியியல்பட்டதாரி பார்த்திபன் (22). இருவரும்காதலித்து வந்தனர். இந்த நிலையில் திவ்யா கர்ப்பமடைந்தார். தொடர்ந்து பார்த்திபனிடம் திருமணம் செய்து கொள்ளும்படி தெரிவித்தார். அவரை சமாதானப் படுத்திய பார்த்திபன், கருக்கலைப்பு செய்ய வைத்தாராம்.

இதையடுத்து, திவ்யாவை பார்த்திபன் தவிர்த்து வந்தார். அதிர்ச்சியடைந்த திவ்யா, பல்லடம் அனைத்து மகளிர்காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய வளாகத்தில் வைத்து, விஷம் அருந்திய திவ்யா மயங்கி விழுந்தார்.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பல்லடம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்த நிலையில், தலைமறைவான பார்த்திபனை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in