கிருஷ்ணகிரி, தருமபுரியில் வீர வணக்க நாள் அனுசரிப்பு :

கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை சார்பில் நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், மறைந்த போலீஸாருக்கு வைக்கப்பட்ட நினைவு தூணில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் காவல்துறை சார்பில் நடந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில், மறைந்த போலீஸாருக்கு வைக்கப்பட்ட நினைவு தூணில் ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் காவல் துறை சார்பில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகத்துக்கு முன்பு உள்ள மைதானத்தில் காவல்துறை சார்பில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. ஆட்சியர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி, ஏஎஸ்பி., அரவிந்த் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் மாவட்ட வன அலுவலர், போலீஸார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மறைந்த போலீஸாருக்கு வைக்கப்பட்ட நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். மறைந்த போலீ ஸாருக்கு, 63 குண்டுகள்முழங்க போலீஸ் மரியாதை செலுத்தப் பட்டது.

ஓசூர் ஏஎஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, உயிரிழந்த காவலர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டு, ஏஎஸ்பி அரவிந்த் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ஏஎஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதேபோல தேன்கனிக் கோட்டை, கெலமங்கலம், பாகலூர் ஆகிய காவல் நிலையங்களிலும் வீர வணக்க நாள் மற்றும்மக்கள் குறைகேட்பு முகாம் நடைபெற்றது.

இதேபோல் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் எஸ்பி கலைச்செல்வன் தலைமையில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க உயிரிழந்த போலீஸாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in