

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 381 ஏரிகள் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ளன. மொத்தம் உள்ள இந்த 909 ஏரிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக 69 ஏரிகள் நிரம்பியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான தாமல் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.