

சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்தவர் சரவணன் (48). இவர் ஒரு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு 7-ம் வகுப்பு படித்த மாணவியை 2015-ம் ஆண்டு டிச.14-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக திருப்பத்தூர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். வழக்கை விசாரித்த சிவகங்கை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பாபுலால், ஆசிரியர் சரவணனுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார்.
சிவகங்கை அருகே காஞ்சிரங் காலைச் சேர்ந்தவர் ரங்கராஜ் (36). இவர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். 2-ம் வகுப்பு படித்த மாணவியை 2015-ம் ஆண்டு ஆக.11-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிவகங்கை மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரங்கராஜை கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த சிவகங்கை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பாபுலால், ஆசிரியர் ரங்கராஜூக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.