Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM

லிம்ரா நிறுவனம் சார்பில் - வெளிநாட்டில் மருத்துவம் படிக்க மாணவர் சேர்க்கை : ஈரோட்டில் நாளை, சேலத்தில் 24-ம் தேதி கருத்தரங்கு

லிம்ரா நிறுவனம் சார்பில் வெளி நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான கருத்தரங்கு, நாளை (23-ம் தேதி) ஈரோட்டிலும், 24-ம் தேதி சேலத் திலும் நடக்கிறது.

இதுகுறித்து லிம்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 19 ஆண்டுகளாக வெளிநாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் தமிழக மாணவர்களுக்கு வழிகாட்டியாக உள்ள லிம்ரா நிறுவனம், 1200 மருத்துவர்களை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் பிலிப்பைன்ஸில் உள்ள தலைசிறந்த மற்றும் தேசிய மருத்துவ கமிஷன் மற்றும் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் பெற்று தருகிறது.பிலிப்பைன்ஸில் தமிழகத்தின் சீதோஷ்ண நிலையே நிலவுகிறது. இங்கு தென்னிந்திய உணவுடன் கூடிய ஆண், பெண் இருவருக்கும் தனித்தனி பாதுகாப்புடனான தங்கும் விடுதி உள்ளது. இந்த பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ்.க்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த பல்கலைக்கழகங்களில் சேர்ந்து மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், ஈரோடு ஈவிஎன் சாலையில் உள்ள ஆட்ரியம் (Atrium) ஓட்டலில் நாளை (23-ம் தேதி) மாலை 4.30 மணிக்கு நடக்கும் கருத்தரங்கு மற்றும் 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு சேலம் ஜங்ஷன் பிரதான சாலையில் உள்ள சிவராஜ் ஹாலிடே இன் ஓட்டலில் நடக்கும் கருத்தரங்கிலும் பங்கேற்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 9952922333, 9445483333, 9445783333 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x