திருவள்ளூர் அருகே ஊராட்சி தலைவருக்கு அரிவாள் வெட்டு: மக்கள் சாலை மறியல்  :

திருவள்ளூர் அருகே ஊராட்சி தலைவருக்கு அரிவாள் வெட்டு: மக்கள் சாலை மறியல் :

Published on

அப்போது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 மர்ம நபர்கள் அரிவாளால் யுவராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

படுகாயமடைந்த யுவராஜை பொதுமக்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற யுவராஜ், மேல் சிகிச்சைக்காக திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, மப்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையே ஊராட்சி தலைவர் யுவராஜை வெட்டியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, அவரது உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடம் விரைந்த திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன், ‘குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள்’ என உறுதியளித்ததை அடுத்து போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in