

அருப்புக்கோட்டை தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமி. தற்போது அமமுக மாவட்டச் செயலராக உள்ளார். இவரது தம்பி ராஜராஜன். வழக்கறிஞர். இவரது மனைவி செண்பகவள்ளி. ராஜராஜனுக்குச் சொந்தமாக காரியாபட்டி அருகே உள்ள முடுக்கன்குளத்தில் 42 ஏக்கர் 82 செண்ட் புன்செய் நிலம் இருந்தது.
இந்நிலத்தை ராஜராஜனிட மிருந்து ஏமாற்றி முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமி பவர் எழுதி வாங்கி ரூ.2 கோடிக்கு விற்றுவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, ஆம்புலென்ஸ் வாகனத்தில் ராஜராஜனை அழைத்து வந்த அவரது மனைவி செண்பகவள்ளி, விருதுநகர் மாவட்ட பத்திரப் பதிவாளரிடம் புகார் அளித்தார். அவரிடம் பதிவாளர் சசிகலா விசாரணை நடத்தினார். இதுகுறித்து செண்பக வள்ளி கூறியதாவது: 2016 மே மாதம் எனது கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்டார். ஆனால், 2018-ல் அவரை குடும்பச் சொத்தை பதிவு செய்வதாகக் கூறி, அவரது சகோதரர் சிவசாமி அழைத்துச் சென்று 42 ஏக்கரையும் பவர் எழுதிவாங்கி ரூ.2 கோடிக்கு விற்று, எங்களை மோசடி செய்துள்ளார் என்றார்.
முன்னாள் எம்எல்ஏ சிவசாமி யிடம் கேட்டபோது, "எனது தம்பி பவர் எழுதிக் கொடுத்தார். நிலத்தை விற்றேன் என்றார்.