வாரந்தோறும் சனிக்கிழமைகளில் -  தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் குடும்ப அட்டை திருத்த முகாம் :

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் - தூத்துக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் குடும்ப அட்டை திருத்த முகாம் :

Published on

தமிழக சமூகநலன் மற்றும் மகளிர்உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தூத்துக்குடி டூவிபுரம் 8-வது தெருவில் அமைந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி முதல்ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஸ்மார்ட் கார்டுகளில் (குடும்ப அட்டை) புகைப்பட மாற்றம், செல்போன் நம்பர் மாற்றம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம்,குடும்பத் தலைவர் மாற்றம், குடும்பஉறுப்பினர் நீக்கம் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in