

தமிழ்நாடு செக்யூரிட்டி தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் போனஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், திருப்பூரில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விமலேஸ்வரன் வரவேற்றார். பொதுச்செயலாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 15 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். தீபாவளி விடுமுறை நாளில் பணிபுரியும் செக்யூரிட்டிகளுக்கு உணவு வழங்குவதுடன், அரசு விடுமுறை தினம் என அறிவித்த நாட்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.