செங்கை மின் வாரியத்துக்கு 570 இலவச இணைப்புக்கு அனுமதி :

செங்கை மின் வாரியத்துக்கு   570 இலவச இணைப்புக்கு அனுமதி :
Updated on
1 min read

விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் ஒரு லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை ரூ.3,025 கோடியில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்நிலையில், செங்கல்பட்டு மின் பகிர்மான வட்டத்தில், 570 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க மின் வாரியம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2003 முதல் 2005 வரை இலவச மின்சாரத்துக்காக 470 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு, உரிய ஆவணங்களுடன் மின்வாரிய அலுவலகத்தை அணுகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ``இது தொடர்பாக ஏற்கெனவே பதிவு செய்த 470 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சில விவசாயிகள் நிலத்தை விற்பனை செய்திருக்கலாம். எனவே, முறையாக ஆய்வு செய்து, இலவச மின் இணைப்பு வழங்கப்படும். அதேபோல, வெவ்வேறு திட்டங்களில் ரூ.50,000, ரூ.25,000 பணம் செலுத்திக் காத்திருப்பவர்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in