தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கு - வாக்குச்சாவடி மைய அளவில் குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு : கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல்

கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்.
கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறார் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்.
Updated on
1 min read

தடுப்பூசி செலுத்திக் கொள்வோ ருக்கு, முகாம் நடைபெறும் அந்தந்த வாக்குச்சாவடி மைய அளவிலேயே குலுக்கல் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சி யர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் வரும் 23-ம் தேதி நடத்தப்படவுள்ள மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில் விடுபட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு மேற்கொள்ளப் படவேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோச னைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காணொலி வாயிலாக நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பேசியது: அக்.23-ம் தேதி நடைபெறவுள்ள முகாம் களில் பங்கேற்று தடுப்பூசி செலுத் திக் கொள்வோருக்கு, முகாம் நடைபெறும் அந்தந்த வாக்குச் சாவடி மைய அளவிலேயே குலுக்கல் நடத்தப்பட்டு, தேர்ந்தெ டுக்கப்படுவோருக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அவரது சொந்த செலவில் சிறப்பு பரிசுகளை வழங்க உள் ளார்.

இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலம் வந்த பிறகும் செலுத்தாதவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண், ஆதார் எண் போன்ற விவரங்கள் குறித்து வீடு வீடாக சென்று கணக்கெடுத்து சேகரிக்கவேண்டும். 50 வீடுகளுக்கு ஒரு கணக்கீட்டாளரை நியமனம் செய்ய வேண்டும். கணக்கெடுப்புப் பணிகளை அக்.21-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களுக்கு மாவட்ட அளவில் குலுக்கல் நடத்தப்பட்டு முதல் பரிசாக வாஷிங் மிஷின், 2-ம் பரிசாக கிரைண்டர், 3-ம் பரிசாக மிக்ஸி, 4-ம் பரிசாக 25 பேருக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக 100 பேருக்கு பாத்திரங்கள் வழங்கப்படவுள்ளன. 25-க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள முகாமுக்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சேர்க்கப்படும்.

கரோனா இல்லாத மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்க 6-ம் கட்ட முகாமின் மூலம் 100 சதவீத இலக்கை நமது மாவட் டம் எய்த அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், சிறப்பு வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) கவிதா, கோட்டாட்சியர் என்.எஸ்.பால சுப்பிரமணியன், சமூகப்பாதுகாப் புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வம், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, சுகாதாரத்துறை இணை இயக் குநர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குநர் சந்தோஷ் குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கூட்ட அரங்கிலும், மற்ற அனைத் துத் துறைகளின் அலுவலர்கள் காணொலி வாயிலாகவும் பங்கேற் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in