25 சதவீத போனஸ் வழங்கக் கோரி - நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் :

25 சதவீத போனஸ் வழங்கக் கோரி -  நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்  :
Updated on
1 min read

25 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஜனநாயக அங்காடிகள் சுமை தூக்குவோர் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் மணிகண் டன் தலைமை வகித்தார். வேப்பந் தட்டை வட்டம் கிருஷ்ணாபுரம் கிடங்கு முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கரோனா கால பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டு நிகழாண்டு 25 சத வீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். கிடங்குகளில் தண்ணீர், கழிப்பிடம், ஓய்வறை, முதலுதவி பெட்டி வைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். கரோனா பாதித்த ஊழியர்களுக்கு நிவார ணம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் முருகன், புரட்சி கர இளைஞர் கழக மாவட்டப் பொறுப்பாளர் நிர்மல் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in