Published : 20 Oct 2021 03:11 AM
Last Updated : 20 Oct 2021 03:11 AM

பட்டாசு கடைக்கு அக்.22 வரை அவகாசம் :

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் கூறியுள்ளதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள், அரசு பொது இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் கட்டிட வரைபடம் அசல், கட்டிட உரிமைக்கான ஆவணம் அல்லது வாடகை ஒப்பந்த பத்திரம் அசல், ரூ.500 அரசு கணக்கில் செலுத்திய செலுத்துச்சீட்டு அசல், அடையாள அட்டை (பான்கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு), ஊராட்சி அல்லது நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கலாம்.

இந்திய வெடிபொருள் சட்ட விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரர்களுக்கு தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x