Published : 20 Oct 2021 03:11 AM
Last Updated : 20 Oct 2021 03:11 AM

தீபாவளி முன்னிட்டு வேலூர் ஆவினில் - சிறப்பு இனிப்பு வகைகள் அறிமுகம் :

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (ஆவின்) சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 276 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து தினசரி சராசரியாக 1.45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சராசரியாக 55 ஆயிரம் லிட்டர் பால் சென்னை மக்களின் தேவைக்காகவும், சுமார் 65 ஆயிரம் லிட்டர் பால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருக்கும் 500 ஆவின் முகவர்கள் மூலமாக பால் பாக்கெட்டுகளாகவும், தி.மலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கும் அனுப்பப்படுகின்றன.

இவை தவிர, மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் விற்பனையும் ஆவின் மூலம் நடைபெற்று வருகிறது. இதில், அக்மார்க் தரத்துடன் கூடிய ஆவின் நெய், கோவா, மைசூர்பாகு, பால் பவுடர், ஐஸ்கிரீம், மில்க் கேக், பேரீச்சை கோவா, லஸ்ஸி, மோர், தயிர், சுவையூட்டிய பால் வகைகள், வெண்ணை போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வேலூர் ஆவின் மூலம் மாதந் தோறும் சராசரியாக ரூ.1 கோடியே 20 லட்சம் அளவுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பனை செய்யப்படுவது குறிப் பிடத்தக்கது.

இந்நிலையில், வேலூர் ஆவினில் தீபாவளி பண்டிகையைமுன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை தொடங்கி யுள்ளது. இந்தாண்டு தீபாவளியை யொட்டி 500 கிராம் மைசூர்பாகு ரூ.230, 250 கிராம் மைசூர்பாகு ரூ.120, 250 கிராம் மில்க் கேக் ரூ.120, 200 கிராம் நெய் லட்டு ரூ.120, 100 கிராம் பாதாம் அல்வா ரூ.100, 250 கிராம் டேட்ஸ் கோவா ரூ.120-க்கு விற்பனைக்குகொண்டு வந்துள்ளனர்.

வேலூர் ஆவினில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீபாவளி இனிப்பு விற்பனையை ஆவின் பொது மேலாளர் ரவிக்குமார் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறும்போது, ‘‘ஆவின் தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 15 டன் அளவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விற்பனைக்காக ஆவின் பாலகங்கள் மட்டுமின்றி தற்காலிக ஆவின் விற்பனை மையங்கள், மொத்த பால் உபபொருட்கள் விற்பனையாளர்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்படும்.

ஆவின் இனிப்பு மொத்த தேவைக்கு பி.விஜயரங்கன் (வேலூர்) 94883-03158, எம்.முருகன் (திருப்பத்தூர்) 99941-27631, ஜி.நாகராஜன் (ராணிப் பேட்டை) 94863-36101 ஆகிய எண் களில் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார். அப்போது, ஆவின் உதவி பொதுமேலாளர்கள் பி.விஜயரங்கன், மஹேந்திரமால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x