ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் :

ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

கரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த ரூ.15,000 ஊக்கத்தொகையை உடனடி யாக வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணி யாளர் சங்க மாநில இணைச் செயலாளர் கே.ஜெயபாரதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் பி.முத்துமாரி கோரிக்கையை விளக்கிப் பேசினார்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் காசி நாததுரை தலைமையிலும், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத் தலைவர் இளையராஜா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in