கடலூரில் எஸ்பி டெக்ஸ் ஜவுளி கடை திறப்பு விழா :

கடலூரில் எஸ்பி டெக்ஸ் ஜவுளி கடை திறப்பு விழா நடைபெற்றது.
கடலூரில் எஸ்பி டெக்ஸ் ஜவுளி கடை திறப்பு விழா நடைபெற்றது.
Updated on
1 min read

கடலூரில் எஸ்பி டெக்ஸ் ஜவுளி கடை திறப்பு விழா நடைபெற்றது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையம் பின்புறம் சிதம்பரம் லிங்க் ரோடு பகுதியில் புதிதாக எஸ்பி டெக்ஸ் பிரம்மாண்ட ஜவுளி நிறுவனம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் திறந்து வைத்தார். ஜேகேஆர் டெக்ஸ் நிறுவனர் கேவிஆர் ஜெயபால் உடனிருந்தார். எஸ்பி டெக்ஸ் உரிமையாளர்கள் சுகுமார்காந்தி,கிஷோர் பாலாஜி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றினார். ஜேகேஆர் டெக்ஸ் ரமேஷ் காந்தி முதல் விற்பனையை தொடக்கி வைக்க ஆடிட்டர் ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் டிஎஸ்பி கரிகால் பாரி சங்கர், இன்ஸ்பெக்டர் கவிதா,வணிகர் சங்க பேரமைப்பு மண்டலத் தலைவர் சண்முகம், ஓம் பாலாஜி ஸ்டோர்ஸ் பவானி ஜெயபால், கடலூர் நகர திமுக செயலாளர் ராஜா, லஷ்மி செக்யூரிட்டீஸ் தினகரன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், வேலவன் ஸ்டீல்ஸ்வேல்முருகன், கடலூர் முன்னாள் சேர்மன் ராஜேந்திரன், பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சண் முத்துகிருஷ்ணன், அமமுகமாவட்ட செயலாளர் சுந்தர மூர்த்தி, ராதாகிருஷ்ணன், பொரு ளாளர் முருகன், விடுதலை சிறுத்தைகள் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தாமரைச் செல்வன், அதிமுக வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in