

தமிழகம்-ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள வேப்பனப்பள்ளி அடுத்த உண்டிகை நத்தம் கிராமத்தில் கீரம்மா கோயில் உள்ளது.
இக்கோயிலில் இரு மாநில எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த இருமாநில மக்களும் ஒருங்கிணைந்து ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உற்ஸவ திருவிழா நடத்துவது வழக்கம். 100 ஆண்டுகளைக் கடந்து தொடர்ந்து நடைபெறும் இத்திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு சிறப்பு அலங்காரங்களுடன் மகா உற்ஸவ நிகழ்ச்சி நடந்தது. இதில், உண்டிகைநத்தம் கிராமத்தில் தொடங்கி ஆந்திர மாநிலம் ஓ.என்.கொத்தூர், அரியனப்பள்ளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுவாமி ஊர்வலம் மேள தாளம் முழங்க வாண வேடிக்கையுடன் நடந்தது.
மேலும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.