

கோட்டக்குப்பம் அருகே டேங்க் ஆப்ரேட்டர் கொலையில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மணி (52). இவர் கோட்டக்குப்பத்தை அடுத்த பட்டானூரில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் ஆயுதபூஜையையொட்டி நேற்று முன்தி னம் இரவு தண்ணீர் தொட்டிக்கு பூஜை செய்தார். அப்போது ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்தது.
அதிர்ச்சி அடைந்த மணி தப்பியோடினார். அவரை துரத்தியஅக்கும்பல் பயங்கர ஆயுதங் களால் வெட்டியதில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த ஆரோ வில் போலீஸார் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக
கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொலை செய்யப்பட்ட மணியின்மனைவி வள்ளி ஆரோவில் போலீ ஸில் புகார் அளித்தார். இப்புகாரில் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். புதுச்சேரி காமராஜ் நகரைச் சேர்ந்த செல்வி (46), ஜோஷ்வா (20) மற்றும் மது (28),பாஸ்கர் (30), ஆனந்தராஜ் (27),சரண் (21), புத்தர் (42), முருகன் (42) ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற் கொண்டனர்.
"கடந்த ஆண்டு புதுவை மேட்டுப்பாளையம் பகுதியில் சுந்தர் என்கிற மாந்தோப்பு சுந்தர் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட மணியின் மகன்கள் சுந்தர், வினோத் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இவர்களை பழிவாங்க குற்றம்சாட்டப்பட்டவர்கள் காத்திருந் தனர். ஆனால் இதை அறிந்த சுந்தர், விநோத் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதனைதொடர்ந்து சுந்தர், வினோத்துக்கு பதிலாக அவர்களது தந்தைமணியை கொலை செய்ததுதெரிய வந்தது. குற்றம் சாட்டப் பட்டவர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித் தன.