மரக்காணம் ஒன்றிய தேர்தல் அலுவலரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் :

மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Updated on
1 min read

மரக்காணம் ஒன்றிய தேர்தல் அலுவலரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மரக்காணம் ஒன்றியத்திற் குட்பட்ட கூனிமேடு ஊராட்சியில் உள்ள 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுமதி சந்தோஷ்குமார், ரேவதிபுருஷோத்தமன் உட்பட 5 பேர் போட்டியிட்டனர். இதில் சுமதி மற்றும் ரேவதி ஆகியோர் தலா 171 ஓட்டுகள் சமமாக பெற்றுள்ளனர்.

இதனால் அந்த வார்டில் யார் வெற்றி பெற்றது என்று உடனயாக தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அறிவிக்கமுடியாத நிலை ஏற் பட்டது.

அப்போது நள்ளிரவு நேரம் என்பதால் இருவரையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய மறுநாள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு அதிகாரிகள் வரச்சொல்லியுள்ளனர்.

மறுநாள் சுமதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மரக்காணத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலு வலகத்திற்கு சென்றனர். அதி காரிகள் முறையான பதில் அளிக்காமல் அவர்களை அலைக் கழித்துள்ளனர்.

இந்நிலையில் ரேவதி வெற்றி பெற்றதாக அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அறிவித்தனர். தேர்தலில் போட்டியிட்ட சுமதியின் கணவர் சந்தோஷ்குமார் மாற்றுத்திறனாளி ஆவார். இதனால் சுமதிக்கு ஆதரவாக விழுப்புரம் மாவட்ட டிசம்பர 3 இயக்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் அண் ணாமலை தலைமையில் 50- க்கும்மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், ஒரு தலைபட்சமாக அறிவிப்பு செய்த தேர்தல் நடத்தும் அதி காரிகளை கண்டித்து மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இதையடுத்து மரக்காணம் போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சுமதி மற்றும் ரேவதி ஆகியோர் தலா 171 ஓட்டுகள் சமமாக பெற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in