2 மின் ஊழியர்கள் சஸ்பெண்ட் :

2 மின் ஊழியர்கள் சஸ்பெண்ட்  :
Updated on
1 min read

கண்ணமங்கலம் அருகே மின்மாற்றி யில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின் ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குண்ணத்தூர் அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தில் வசித்தவர் லட்சுமணன் மகன் ராஜ்கமல் (24). இவர், ஒண்ணுபுரம் துணை மின் நிலையத்தில் கேங்மேனாக கடந்த 7 மாதங்களாக பணியாற்றி வந்தார். இவர், அத்தி மலைப்பட்டு செல்லியம்மன் கோயில் அருகே கடந்த வாரம் மின்மாற்றி மற்றும் மின் பாதைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இது குறித்து கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பணியின்போது கவனக் குறைவாக இருந்ததாகக் கூறி மின்பாதை ஆய்வாளர் துளசி, கம்பியாளர் குமரேசன் ஆகியோரை மின்சாரம் வாரியம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in