Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM

மது கூடமாக மாறிய : போளூர் ரயில் நிலையம் :

கரோனா ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வழி தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்களும், முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால், தி.மலை, போளூர்,கண்ணமங்கலம் மற்றும் தண்டரை உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களும் வெறிச்சோடின.

இதனை தங்களுக்கு சாதகமாக சமூக விரோத கும்பல் பயன்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக, போளூர் ரயில் நிலையத்தை திறந்தவெளி மது அருந்தும் கூடாரமாக மாற்றியுள்ளனர். இரவு, பகல் பாராமல் மது குடிப்பதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். மது அருந்திவிட்டு, பாட்டிலை தூக்கி வீசி உடைப்பதும், தண்ணீர் பாட்டில் மற்றும் டம்பளரை அதே இடத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, “போளூர் ரயில் நிலையத்தை மது அருந்தும் கூடாரமாக மாற்றப்பட்டுள்ளது. ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை முற்றிலும் குறைந்துவிட்டதால், ரயில் நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் குறைந்துபோனதே, அவர்களுக்கு சாதகமாகிவிட்டது. இதனால், அவ் வழியாக செல்லும் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.

அவர்களது செயலை ரயில் நிலைய அதிகாரிகள் கண்டித்து விரட்ட வேண்டும். அல்லது காவல்துறையிடம் முறையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அமைதியாக உள்ளதால், காவல்துறையினரும் நேரடியாக ஆய்வு செய்து சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x