அரசியல் பிரமுகரின் மகள் மீது அவதூறு பரப்பியவர் கைது :

அரசியல் பிரமுகரின் மகள் மீது அவதூறு பரப்பியவர் கைது :
Updated on
1 min read

காங்கயத்தை சேர்ந்த அரசியல் பிரமுகரின் மகள், பிற சமூகத்தைசேர்ந்த 42 வயது நபருடன்திருமணம் செய்துகொண்டதாக அடையாளம் தெரியாத தம்பதியின் புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவியது.பொய்யான தகவலை பரப்பி,இரு சமூகங்களுக்கு இடையே பிரச்சினையை தூண்டும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம்போலீஸாரிடம், புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொய் யான தகவல் பரப்பியதாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சந்திரசேகர் (51) என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in