Published : 14 Oct 2021 05:56 AM
Last Updated : 14 Oct 2021 05:56 AM

சட்டப் பல்கலை. செனட் உறுப்பினரானார் : எம்எல்ஏ கிருஷ்ணசாமி :

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசின் செயலர் (சட்ட விவகாரங்கள்) பி.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு (செனட்) உறுப்பினராக பூந்தமல்லிசட்டப்பேரவை உறுப்பினர் ஏ.கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து எம்எல்ஏ கிருஷ்ணசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x