காரியாபட்டி அருகே கர்ப்பிணி தற்கொலை :

காரியாபட்டி அருகே கர்ப்பிணி தற்கொலை :
Updated on
1 min read

காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனக் குமார். இவரது மனைவி கற்பக வல்லி (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

கர்ப்பமடைந்த கற்பக வல்லியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தையின் வளர்ச்சி போதுமானதாக இல்லை என தெரிவித்தனர். அதனால் மனவேதனையடைந்த கற்பகவல்லி கடந்த செப்.27-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற் கொலைக்கு முயன்றார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு காரியாபட்டி அரசு மருத் துவமனையில் சேர்த்தனர். ஆனால், கற்பகவல்லி சுயநினை வில்லாமல் இருந்தார். பின்னர், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கற்பகவல்லி நேற்று உயிரிழந்தார். அ.முக் குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in