குடியாத்தம் பகுதிகளில் 16-ம் தேதி மின் நிறுத்தம் :

குடியாத்தம் பகுதிகளில் 16-ம் தேதி மின் நிறுத்தம் :
Updated on
1 min read

குடியாத்தம் பகுதியில் 4 துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் 16-ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து, குடியாத்தம் மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘பாக்கம், பிச்சனூர், பரதராமி, செதுக்கரை துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்புப் பணிகள் வரும் 16-ம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளன. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குடியாத்தம், நெல்லூர்பேட்டை, கீழ் ஆலத்தூர், மோடிகுப்பம், பிச்சனூர் ஏரியா, கொத்தூர், பூசாரிவலசை, பரதராமி, செதுக்கரை, புதுப்பேட்டை, டெலிகாம் ஏரியா, செருவங்கி, சந்தப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in