Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் - திமுக கூட்டணி அதிக பதவிகளை கைப்பற்றியது : கந்திலி ஒன்றியத்தை கைப்பற்ற கட்சிகள் மும்முரம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கூட்டணி மொத்தமாக வென்றுள்ளது. அதேபோல, 124 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக 78 இடங்களில் வென்று 6 ஒன்றியங்களை திமுக கைப் பற்றியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, கந்திலி, நாட் றாம்பள்ளி என 4 ஒன்றியங்களுக்கு கடந்த 6-ம் தேதி முதற் கட்ட தேர்தலும், மாதனூர் மற்றும் ஆலங்காயம் ஒன்றியங்களுக்கு கடந்த 9-ம் தேதி 2-ம் கட்ட தேர்தலும் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் 6 இடங்களில் நேற்று முன்தினம் காலை முதல் விடிய,விடிய எண்ணப்பட்டன. கந்திலி, ஜோலார் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்றியங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு வரை வெளியிடப்பட்டன. மாதனூர், ஆலங்காயம் மற்றும் நாட்றாம் பள்ளி ஆகிய 3 ஒன்றியங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் விவரம், ஒன்றிய கவுன்சிலர்கள் விவரம், கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் ஆகியோரின் முழு தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிட காலதாமதம் ஏற்பட்டது. வெற்றி, தோல்வி பெற்ற வர்களின் விவரம் தெரியாமல் பொதுமக்கள் பரிதவித்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விவரம் வெளியிடப்பட்டது. வெற்றி பெற்ற மாவட்ட கவுன்சிலர்கள் விவரம் வருமாறு:

1-வது வார்டு சரிதா (திமுக), 2-வது வார்டு சசிகலா (காங்கிரஸ்), 3-வது வார்டு பிரியதர்ஷினி(திமுக), 4-வது வார்டு சத்தியவாணி (திமுக), 5-வது வார்டு ஜெயா (திமுக), 6-வது வார்டு சிந்துஜா(திமுக), 7-வது வார்டு முனிவேல் (திமுக), 8-வது வார்டு சுபாஷ்சந்திரபோஸ் (விடுதலை சிறுத்தைகள்), 9-வது வார்டு கவிதா தண்டபாணி(திமுக), 10-வது வார்டு சூரியகுமார் (திமுக), 11-வது வார்டு சுப்பிரமணி (திமுக), 12-வது வார்டு குணசேகரன்(திமுக), 13-வது வார்டு சத்தியவாணி (திமுக).

வெற்றிபெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் விவரம்:

1. திருப்பத்தூர் ஒன்றியம் மொத்தம் 21 வார்டுகள்: 1-வது வார்டு மஞ்சுளா(அதிமுக), 2-வது வார்டு மல்லிகா(திமுக), 3-வது வார்டு யுவராஜ் (அதிமுக), 4-வது வார்டு ஐயப்பன்(திமுக), 5-வது வார்டு தேவி (திமுக), 6-வது வார்டு செந்தாமரை (திமுக), 7-வது வார்டு இளவரசி (திமுக), 8-வது வார்டு அமலோற்பவம் (திமுக), 9-வது வார்டு மகாராணி(பாமக), 10-வது வார்டு லலிதா (அதிமுக), 11-வது வார்டு கஸ்தூரி (திமுக), 12-வது வார்டு திருப்பதி(அதிமுக), 13-வது வார்டு விஜியா (திமுக), 14-வது வார்டு ஞானசேகரன் (திமுக), 15-வது வார்டு கலைவாணி (திமுக), 16-வது வார்டு அன்பு (அதிமுக), 17-வது வார்டு காந்தி (திமுக), 18-வது வார்டு பூங்காவனம் (திமுக), 19-வது வார்டு துக்கன் (திமுக), 20-வது வார்டு ராமலிங்கம் (திமுக), 21-வது வார்டு பிருந்தாவதி (திமுக).

நாட்றாம்பள்ளி ஒன்றியம்- மொத்தம் 15 வார்டுகள்:

1-வது வார்டு அம்சவேணி (அதிமுக), 2-வது வார்டு செல்வி (தேமுதிக), 3-வது வார்டு ஜெயா(திமுக), 4-வது வார்டு தியாகராஜன் (அதிமுக), 5-வது வார்டு தனலட்சுமி (திமுக), 6-வது வார்டு தேவராஜ் (திமுக), 7-வது வார்டு முரளி(திமுக), 8-வது வார்டு சக்தி (அதிமுக), 9-வது வார்டு தமிழரசி(திமுக), 10-வது வார்டு சந்தோஷ் (அதிமுக), 11-வது வார்டு ஆனந்தன் (திமுக), 12-வது வார்டு சுதா(சுயேட்சை), 13-வது வார்டு காந்தி (சுயேட்சை), 14-வது வார்டு கார்த்திகேயன் (அதிமுக), 15-வது வார்டு வெண்மதி (திமுக).

மாதனூர் ஒன்றியம் -மொத்தம் 24 வார்டுகள் (இதில் மாதனூர் ஒன்றியம் நாயக்கநேரியில் மனு வாபஸ் பெறப்பட்டது)

1-வது வார்டு மகாதேவன் (அதிமுக), 2-வது வார்டு கார்த்திக் (திமுக), 3-வது வார்டு ஆப்ரிந்தாஜ்(திமுக), 4-வது வார்டு தீபா (திமுக), 5-வது வார்டு மஞ்சுளா(திமுக), 6-வது வார்டு திருக்குமரன் (திமுக), 7-வது வார்டு சாந்திசீனிவாசன் (திமுக), 8-வது வார்டு ஜெயந்தி (அதிமுக), 9-வது வார்டு விஜயலட்சுமி(அதிமுக), 10-வது வார்டு ராஜேந்திரன் (திமுக), 11-வது வார்டு செந்தில்குமார் (திமுக), 12-வது வார்டு காயத்ரி (திமுக), 13-வது வார்டு சம்பங்கி (அதிமுக), 14-வது வார்டு சாவித்திரி(திமுக), 15-வது வார்டு சுரேஷ்குமார் (திமுக), 16-வது வார்டு கார்த்திக் (திமுக), 17-வது வார்டு கோமதி(திமுக), 18-வது வார்டு ஜோதி (திமுக), 19-வது வார்டு முத்து(திமுக), 20-வது வார்டு மனோரஞ்சிதம் (சுயேட்சை), 21-வது வார்டு பரிமளா (திமுக), 22-வது வார்டு கன்னியப்பன் (அதிமுக), 23-வது வார்டு ரவிக்குமார் (திமுக).

ஜோலார்பேட்டை ஒன்றியம்- மொத்தம் 25 வார்டுகள்:

1-வது வார்டு மோகன்ராஜ் ஜனனி (திமுக), 2-வது வார்டு ரூபிதுரைபாண்டியன் (திமுக), 3-வது வார்டு செந்தில்குமார் (திமுக), 4-வது வார்டு எழிலரசி (திமுக), 5-வது வார்டு உமாகண்ணுரங்கம் (திமுக), 6-வது வார்டு ரேவதி (சுயேட்சை), 7-வது வார்டு சரவணன் (அதிமுக), 8-வது வார்டு லட்சுமி (திமுக), 9-வது வார்டு சிவப்பிரகாசம் (திமுக), 10-வது வார்டு செல்வி (திமுக), 11-வது வார்டு கலாஆஞ்சி (திமுக), 12-வது வார்டு புனிதவதி (திமுக), 13-வது வார்டு கலைவாணி (அதிமுக), 14-வது வார்டு தேவி (திமுக), 15-வது வார்டு சத்யா (திமுக), 16-வது வார்டு சவிதா (அதிமுக), 17-வது வார்டு சீனிவாசன் (திமுக), 18-வது வார்டு இளையராஜா (அதிமுக), 19-வது வார்டு நிலா (திமுக), 20-வது வார்டு முருகன் (திமுக), 21-வது வார்டு ரஜினிகாந்த் (திமுக), 22-வது வார்டு பெருமாள் (திமுக), 23-வது வார்டு ராஜா (திமுக), 24-வது வார்டு மணிகண்டன் (அதிமுக), 25-வது வார்டு சிவக்குமார் (அதிமுக).

5. ஆலங்காயம் ஒன்றியம்- மொத்தம் 18 வார்டுகள்:

1-வது வார்டு குமரன் (அதிமுக), 2-வது வார்டு சாவித்ரி (திமுக), 3-வது வார்டு வேண்டாமணி(சுயேட்சை), 4-வது வார்டு வசந்தி (அதிமுக), 5-வது வார்டு கங்காதரன் (பாமக), 6-வது வார்டு சங்கீதா (திமுக), 7-வது வார்டு காயத்ரி(திமுக), 8-வது வார்டு பிரத்தா(திமுக), 9-வது வார்டு பூபாலன் (திமுக), 10-வது வார்டு சிகாமணி(திமுக), 11-வது வார்டு சதாசிவம்(திமுக), 12-வது வார்டு பிரபாகரன் (அதிமுக), 13-வது வார்டு முருகன் (திமுக), 14-வது வார்டு பாமிதாபானு (திமுக), 15-வது வார்டு லட்சுமி (திமுக), 16-வது வார்டு திலகா (அதிமுக), 17-வது வார்டு மீனாட்சி (பாமக), 18-வது வார்டு சங்கர் (திமுக).

6. கந்திலி ஒன்றியம் -மொத்தம் 22 வார்டுகள்:

1-வது வார்டு கோவிந்தன் (சுயேட்சை), 2-வது வார்டு மணிகண்டன் (அதிமுக), 3-வது வார்டு நீலாம்மாள் (திமுக), 4-வது வார்டு மோகன்குமார் (திமுக), 5-வது வார்டு சிவகாமி (அதிமுக), 6-வது வார்டு பன்னீர்செல்வம் (அதிமுக), 7-வது வார்டு லட்சுமி (பாஜக), 8-வது வார்டு விஜயா (திமுக), 9-வது வார்டு லீலாசுப்பிரமணியம்(அதிமுக), 10-வது வார்டு சண்முகபிரியா (சுயேட்சை), 11-வது வார்டு ரீனா (அதிமுக), 12-வது வார்டு சாந்தகுமார் (திமுக), 13-வது வார்டு சாந்தி (அதிமுக), 14-வது வார்டு சாந்தா (திமுக), 15-வது வார்டு திருமதி(திமுக), 16-வது வார்டு சக்கரை (திமுக), 17-வது வார்டு தாமோதரன் (திமுக), 18-வது வார்டு லட்சுமி (சுயேட்சை), 19-வது வார்டு சின்னதம்பி (அதிமுக), 20-வது வார்டு ஹேமலதா (திமுக), 21-வது வார்டு மாரிம்மாள் (திமுக), 22-வது வார்டு சங்கீதா (அதிமுக).

இந்த 6 ஒன்றியத்தில் கந்திலி ஒன்றியத்தை தவிர மற்ற 5 ஒன்றியங்களில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளதால் அக்கட்சியைச் சேர்ந்தவர்களே ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் துணைத்தலை வராக மறைமுக தேர்தலில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கந்திலி ஒன்றியத்தில் திமுக 10 வார்டுகளையும், அதிமுக, பாஜக கூட்டணியில் 9 வார்டுகளை கைப்பற்றியுள்ளன. 3 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதால் அவர்களில் ஆதரவு யாருக்கு என்பது பொறுத்து கந்திலி ஒன்றியத்தை திமுக அல்லது அதிமுக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவைச் சேர்ந்தவர்களே கந்திலி ஒன்றி யத்தை கைப்பற்ற தேவையான முன்ஏற்பாடுகளை செய்து வரு வதாகவும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x