Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை :

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. நேற்று அதிகாலை 5 மணி வரை விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: செஞ்சி - 10, மரக்காணம் - 45,வானூர் - 40, சூரப்பட்டு -48, கெடார் - 65,வளவனூர் - 30, கஞ்சனூர் - 68, நேமூர் - 54, விழுப்புரம் - 22, கோலியனூர் - 30, முண்டியம்பாக்கம் - 10, அவலூர்பேட்டை - 28, மணம்பூண்டி - 56, திருவெண்ணெய்நல்லூர் - 10, அரசூர் - 26, முகையூர் - 29, திண்டிவனம் - 3, வல்லம் -3, அனந்தபுரம் - 46, வளத்தி- 3.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x