Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

புதுவையில் ஜெ. சிலை: அதிமுக வலியுறுத்தல் :

புதுவையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை அமைக்க வேண்டும் என்று முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தி யுள்ளது.

புதுவை கிழக்கு மாநில அதிமுக சார்பில் மாநில நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர், தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டை புதுவை கிழக்கு மாநிலம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடுவது. உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடிகளை களைந்து, சுழற்சி முறையில் இடஒதுக்கீடு அளித்து உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை இந்த ஆண்டில் புதுவை அரசு சார்பில் அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x