Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

ஓசூர் நல்லூர் ஊராட்சித் தலைவர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி :

நல்லூர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சாந்தா வீரபத்திரப்பாவிடம் வெற்றிச் சான்றிதழை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், பாலாஜி ஆகியோர் வழங்கினர். உடன் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் மற்றும் பலர்.

ஓசூர்: ஓசூர் ஒன்றியம் நல்லூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக ஆதரவு வேட்பாளர் சாந்தா வீரபத்திரப்பா 1033 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நல்லூர் ஊராட்சி இடைத்தேர்தலில் திமுக ஆதரவு பெற்ற சாந்தா வீரபத்திரப்பா, சந்தியா கிரண்குமார் உட்பட 4 பேர் போட்டியிட்டனர். கடந்த 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நேற்று வாக்கு எண்ணிக்கை ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

நல்லூர் ஊராட்சியில் மொத்த வாக்குகள் 7791. இதில் பதிவான வாக்குகள் 6008. சாந்தா வீரபத்திரப்பா - 3462 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், பாலாஜி ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்வில் ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், முன்னாள் நகரமன்ற தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர். அதேபோல ஓசூர் ஒன்றியத்தில் தும்மனப்பள்ளி ஊராட்சி வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் ராஜப்பாவும், அச்செட்டிப்பள்ளி ஊராட்சி வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் கோபால் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x