Published : 13 Oct 2021 05:50 AM
Last Updated : 13 Oct 2021 05:50 AM

பொன்னப்பநாடார் நினைவு தினம் அனுசரிப்பு :

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும், கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க போராடிய தலைவர்களுள் ஒருவருமான பொன்னப்ப நாடாரின் 46-வது ஆண்டு நினைவு தினம் கருங்கல் ராஜீவ்காந்தி சந்திப்பில் அனுசரிக்கப்பட்டது.

பொன்னப்ப நாடார் படத்துக்கு ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் ராபின்சன், கிறிஸ்டல் ரமணிபாய், ஜோர்தான், ஷஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x