Published : 13 Oct 2021 05:51 AM
Last Updated : 13 Oct 2021 05:51 AM

விவசாயிகள் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி :

நாகப்பட்டினம்: நாகை அருகே பனங்குடியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்காக கையகப்படுத்திய விளைநிலங்களில் 400 ஏக்கர் நிலம் தரிசாக போடப்பட்டுள்ளதால், அந்த இடங்களில் கருவேல மரங்கள் வளர்ந்து குறுங்காடாக மாறி விட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, உப்புநீர் உட்புகுந்து அப்பகுதியில் உள்ள விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 2-ம் கட்ட விரிவாக்கத்துக்காக மீண்டும் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனங்குடி, முட்டம், நரிமணம், உத்தமசோழபுரம், கோபுராஜபுரம் ஆகிய 5 ஊராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தீர்மான நகல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 5 ஊராட்சிகளிலும் 600 ஏக்கர் விளைநிலத்தை தரிசு நிலங்கள் என்று அறிவித்து, கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே அரசு, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது விளைநிலங்களை கையகப்படுத்தி, பெட்ரோல், கெமிக்கல் தொழிற்சாலைகள் அமைப்பதால் விவசாயம் அழிந்து விடும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 5 ஊராட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று பனங்குடி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வாசலில் இருந்து, மோட்டார் சைக்கிள்களில் கருப்புக் கொடியுடன் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x