உரம் உற்பத்தி துறையில் வேலைவாய்ப்புகள் : கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற தொழில் நிறுவன தொடர்பு பயிற்சி பட்டறையில் கல்லூரி நூலகத்துக்கு புத்தகங்களை வழங்குகிறார்,  இந்திய உரத் தொழில் கூட்டமைப்பின் தென்னிந்திய தலைவர் ஒய்.வி.என்.மூர்த்தி.
கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற தொழில் நிறுவன தொடர்பு பயிற்சி பட்டறையில் கல்லூரி நூலகத்துக்கு புத்தகங்களை வழங்குகிறார், இந்திய உரத் தொழில் கூட்டமைப்பின் தென்னிந்திய தலைவர் ஒய்.வி.என்.மூர்த்தி.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உரம் உற்பத்தி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த 3 நாள் தொழில் நிறுவன தொடர்பு பயிற்சி பட்டறை நேற்று தொடங்கியது.

இயற்கை மற்றும் செயற்கை உரம் உற்பத்தி தொடர்புடைய துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோருக்கான திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளும் வகையில் நடைபெறும் இந்த பயிற்சி பட்டறைக்கு கல்லூரி முதல்வர் இறையருள் அருட்கனி அய்யநாதன் தலைமை வகித்தார்.

அவர் பேசும்போது, “அடுத்த 2 ஆண்டுகளில் உரம் சார்ந்த தொழில் துறையில் சுமார் 10 லட்சம் திறன் படைத்த ஊழியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, மாணவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார் அவர்.

கல்லூரி மண்ணியல் துறைத் தலைவர் சுரேஷ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஸ்பிக் நிறுவன தலைமை இயக்க அதிகாரி பாலு கலந்துகொண்டு, உணவு உற்பத்தியில் இயற்கை மற்றும் செயற்கை உரங்களின் பங்கை விளக்கினார். இந்திய உரத் தொழில் கூட்டமைப்பின் தென்னிந்திய தலைவர் ஒய்.வி.என்.மூர்த்தி உரம் உற்பத்தி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்துவிளக்கினார். கல்லூரியின் மண்ணியல் துறை இணை பேராசிரியர் பி.பாக்கியத்து சாலிகா பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்து நடத்துகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in